சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்கச் சென்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றுடன் (29-9-2015) நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றார்.
இன்று புதிய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், மாலை வரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பட்டியளை வெளியிடாமல் ஜெயலலிதா சென்று விட்டதால் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications