நான் கலந்து கொண்ட மெட்ரோ விழாதான் ஜெ.வுக்கு கடைசி பங்ஷன்.. வெங்கையா!
மெட்ரோ விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ விழாவில் ஜெயலலிதா இல்லாத வருத்தம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அரசியலலில் தான் மிகவும் மதிக்கும் ஒரு தலைவி ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை இன்று தொடங்குகிறது. இதனை முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர்.

இதற்கான விழா சென்னை திருமங்கலம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலான தலைவர் என புகழாரம் சூட்டிய அவர், அனைவரையும் கவரக்கூடியவர் அவர் என்றும் கூறினார். மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு தான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவி ஜெயலலிதா என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் மெட்ரோ சேவையை தொடங்கும் ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் இன்றும் வெங்கையா நாயுடு உறுதியளித்தார்.
தான் பங்கேற்ற மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில் தான் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்றார் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் மாதம் நடைபெற்ற மெட்ரோ நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications