தவ வாழ்க்கை வாழ்வதாக கூறும் ஜெயலலிதா இமயமலை பக்கம் போயிறலாமே.. இளங்கோவன்
கோவை: தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மரண அடி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகாரித்து வருவதாகவும், இந்த வெற்றி ஜெயலலிதாவிற்கு கிடைக்கப் போகும் மரண அடி என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆடு, மாடுகளை போல அழைத்துச் செல்லும் மக்களுக்கு, காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தவ வாழ்க்கை வாழ்கின்றேன் என்று சொல்கின்ற ஜெயலலிதா, சென்னையிலும் தமிழ்நாட்டிலும் உட்கார்ந்து கொண்டு எப்படி தவம் செய்ய முடியும். தயவு செய்து இமயமலைக்கு சென்று அங்கே தவம் செய்தால் அவரு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அதனால் தமிழக மக்களுக்கும் ஒரு பெரிய விடுதலை கிடைக்கும் என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications