பங்குனி உத்திர நாளில் வேட்பாளர் லிஸ்ட்... ஏப்.2ல் பிரச்சாரம் ஸ்டார்ட்: ஜெ. ப்ளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்று எதிர்கட்சிகளின் கூடாராம் பெரும் பரபரப்பாக இருக்கிறதே... ஆளும் அதிமுக கூடாராம் எந்த வித சலனமும் இன்றி அமைதியாக இருக்கிறதே என்று ஆள் ஆளுக்கு பேசிக் கொள்ள, அதெல்லாம் சும்மாப்பா... எங்க பக்கம் சைலண்டா எல்லா சமாச்சாரமும் நடந்துகிட்டுதான் இருக்கு என்று காதோரம் வந்து ரகசியம் சொல்கின்றனர் அதிமுகவினர். பங்குனி உத்திர நாளில் வேட்பாளர் பட்டியலோ, தேர்தல் அறிக்கையோ வெளியாகும் என்று கூறும் அவர்கள், ஏப்ரல் 2ல் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் அடித்துச் சொல்கின்றனர்.

இந்த தடவை யாரோட சிபாரிசும் எடுபடாது. எந்த குற்றப்பின்னணியும் இல்லாத வேட்பாளர்களாக நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறாராம். அதற்காகவே உளவுத்துறையினரை வைத்து 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே சர்வே எடுக்கச் சொன்ன ஜெயலலிதா, விருப்பமனு கொடுத்தவர்களில் மிஸ்டர் கிளீன் யாரோ அவருக்குத்தான் இம்முறை சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.

ஒரே நாளில் நேர்காணல், அடுத்தவாராத்தில் 7 கூட்டணி கட்சித்தலைவர்களிடம் பேச்சு வார்த்தை என அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய ஜெயலலிதா, கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை ஒதுக்கிய உடன், இம்மாதம் 23 அல்லது 29ம் தேதியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். வேட்பாளர் பட்டியலை அறிவித்த கையோடு ஏப்ரல் 2ம் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் கிளம்பவும் முடிவு செய்திருக்கிறாராம்.

அதிமுக கூட்டணியில் யார்?

அதிமுக கூட்டணியில் யார்?

தனது சொந்த பலத்தை நம்பி அதிமுக களமிறங்கினாலும், இந்திய குடியரசு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய கட்சிகள், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன.

தொகுதி ஒதுக்கீடு

தொகுதி ஒதுக்கீடு

இது தவிர, தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, ஆகிய கட்சிகளும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை முடித்ததும் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டதும், இம்மாதம், 23 அல்லது, 29ம் தேதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட, ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம். வரும் 23ம் தேதி நிறைந்த பவுர்ணமி, அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாளாகும். அன்றைய தினம் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது.

கேரளா ஜோதிடர்

கேரளா ஜோதிடர்

அதே நேரத்தில் கேரள ஜோதிடர்கள் 29ம் தேதியை குறித்து கொடுத்துள்ளதாகவும் போயஸ் கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் ஆண்டாள் பிறந்த தினமான செவ்வாய் என்பதாலும், புதன், சுக்கிரன், முதல்வருக்கு உகந்ததாக இருப்பதாலும், அன்றைய தினத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது சிறந்தது என, ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே, செவ்வாய் கிழமையில் தான், பல முக்கிய அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டு இருக்கிறாராம்.

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2, 5 ஆகிய எண்கள் ராசியானவை. அந்த அடிப்படையில், வரும், 23ம் தேதி தேர்தல் அறிக்கையையாவது ஜெயலலிதா வெளியிடலாம் என்றும் கூறுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையோடு ஏப்ரல், 2ம் தேதி சூறாவளி சுற்றுப்பயணத்தை ஜெயலலிதா துவக்க முடிவு செய்துள்ளார். முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்த கையோடு வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயலலிதா, இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

முதல்வர் ஜெயலலிதா 5வது முறையாக முதல்வராக பதவியேற்றது ஒரு சனிக்கிழமை நாளில்தான். எனவே இம்முறையும் சனிக்கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+