நிதானம் காக்க வேண்டும்... தொண்டர்களுக்கு ஜெயலலிதா மீண்டும் அறிவுரை
சென்னை: அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க. தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.

அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரெயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.
முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாளை தீர்ப்பு
நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications