வரிசையில் நிற்க வேண்டாம்... அமைச்சர்களுக்கு ஜெ. புது உத்தரவு
சென்னை: தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் வரும்போது குனிந்து நின்று வரவேற்பது... முதல்வர் சென்ற உடன் சில நிமிடங்களில் வெளியேறி விடுவது என வாடிக்கையாக வைத்திருந்த தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் இனிமேல் முதல்வரை வரவேற்கவோ,வழியனுப்பவோ வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த உத்தரவில் முக்கியமாக குறிப்பிட்டுள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்த உடன் பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் தொகுதிவாசிகள், கட்சியினர் அனைவரும் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருக்கு வரவேற்பு
முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து சட்டசபைக்கு கிளம்பி விட்டார் என்று தெரியவந்தாலே அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலக வாசலில் வரிசையாக நின்று கொள்வார்கள். அதேபோல முதல்வர் கிளம்பும் போதும் வழியனுப்ப வரிசையில் நிற்பார்கள்.

புது உத்தரவு
இனிமேல் அமைச்சர்கள் அப்படி நிற்கவேண்டிய அவசியம் இருக்காது. இதற்கான புது உத்தரவை பிறப்பித்துள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இனி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டுமாம்.

லஞ்ச் உடன் வரவும்
தலைமைச் செயலகத்தில் இருந்து பைல்களை உடனுக்குடன் பார்த்து அனுப்பவேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் லஞ்ச் உடன் வந்து பணியை சுறுசுறுப்பாக பார்க்கிறார்களாம் அமைச்சர்கள்.

கோட்டையில் இருக்கணும்
கடந்த 29ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் பிற கட்சியினர் இணையும் விழா நடைபெற்ற போது வந்த அமைச்சர்கள் சில நிமிடங்களிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்களாம். அதனால்தான் இணைப்பு விழா புகைப்படங்களில் கூட அமைச்சர்கள் இடம்பெறவில்லை.

தொகுதிவாசிகளுடன் சந்திப்பு
முதல்வர் வீட்டுக்கு கிளம்பிய உடன் அமைச்சர்களும் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். புது உத்தரவு மூலம் இனி அமைச்சர்கள் மாலை 4 மணிவரை தலைமைச் செயலகத்தில் இருப்பதால் தொகுதிவாசிகள் நேரடியாக வந்து அமைச்சர்களை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications