அதிமுக பிரசார வாகனங்கள் போயஸ் கார்டன் வந்தன
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரச்சாரத்தை சென்னையில் தொடங்குகிறார்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. சென்னை தீவுத் திடலில் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பார்.
சென்னையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் காணப்படுகிறது.
ஜெயலலிதாவின் பேச்சை நேரடியாக ஒளிபரப்ப செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அணிவகுத்து நின்றன.

வாகனத்தை சுற்றிலும் அதிமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக இந்த வாகனம் ஒவ்வொரு ஊரிலும் தயார் நிலையில் வைக்கப்படும் என கூறப்படுகிறது..
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications