சசி குடும்பத்தின் பிடியில் கட்சி,ஆட்சி... ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்காது : கே.பி.முனுசாமி

சசிகலா குடும்பம் மறைமுகமாக ஆட்சி நடத்தவுள்ளதால் ஜெயலலிதாவின் ஆன்மா துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிடியில் ஆட்சி அதிகாரம் செல்வதை ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்காது என முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் கையில் ஆட்சி சென்றிருப்பதால் அவரது ஆன்மா துயரத்தில் ஆழ்ந்துள்ளது என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சசி குரூப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சிமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இன்று மாலை பதவியேற்கிறார்.

Jayalalitha's soul will never accept this : KP.Munusamy

இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் கையில் ஆட்சியும் கட்சியும் சேர்ந்துள்ளதா கூறினார்.

இதனை ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்காது இன்றும் அவர் கூறினார். துரோம் இழைத்த சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் சிக்கியுள்ளதைக் கண்டு ஜெயலலிதாவின் ஆன்மா துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கே.பி.முனுசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+