ஜெயலலிதா கைரேகை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது… ஐகோர்ட்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கைரேகை வைத்துள்ளது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கைரேகை பதித்துள்ளது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட செந்தில்பாலாஜி, எம். ரெங்கசாமி, ஏ.கே. போஸ் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்குவது தொடர்பான அங்கீகார கடிதத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் கையெழுத்து இருக்க வேண்டும். இதற்கு பதிலாக அவரது இடது கை பெருவிரலின் ரேகை பதியப்பட்டு இருந்தது.
இந்த ரேகை, ஜெயலலிதாவினுடையதா என்ற சந்தேகம் இருப்பதாகவும், கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டது தவறு என்றும் தேர்தல் ஆணையத்திற்கு டிராபிக் ராமசாமி கடிதம் எழுதினார். இதற்கு எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை.
இதனையடுத்து, மாஜிஸ்டிரேட்டை நியமித்து மருத்துமனைக்குச் சென்று ஜெயலலிதாவிடம் நேரில் கையெழுத்து வாங்கி வர கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கோரியிருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் வரும் திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications