சசிகலாவை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுவிட்டார் ஜெ.. திவாகரன் பரபர!
சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவரை நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

மன்னார்குடி: சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவரை நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா குடும்பம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை தண்டனை பெற்றனர்.
சசிசலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸால் கட்சியும் ஆட்சியும் பறிபோனது. பற்றாக்குறைக்கு சசிகலா குடும்பத்தினர் மீதான வழக்குகளில் தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

கூலாக பேட்டியளித்த சசி குடும்பம்
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் கட்டம் கட்டி சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை மெகா சோதனை நடத்தினர். இந்த சோதனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த நிலையில் கூலாக பேட்டியளித்து வந்தனர் சசிகலா குடும்பத்தினர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
இந்நிலையில் நேற்று போயஸ்கார்டனிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். சசிகலா அறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி பென்டிரைவ் லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

பதறிய சசி குடும்பம்
போயஸ் கார்டனுக்குள்ளும் வருமான வரித்துறை நுழைந்த சம்பவம் சசிகலா குடும்பத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. தினகரன், விவேக், திவாகரன் என அவரது குடும்பத்தை சேர்ந்த பலரும் பதறிபோய் பேட்டியளித்து வருகின்றனர்.

முழுமையாக பயன்படுத்திய ஜெ.
இந்நிலையில் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்திக்கொண்டு நிராயுதபாணியாக விட்டுச் சென்றுவிட்டார் என குற்றம்சாட்டினார்.

தனியே தவிக்க விட்டு..
33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டு சென்றுவிட்டார் என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பும் செய்யாமல் ஜெயலலிதா விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது
1996 இல் இருந்தே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் அவர் கூறினார். சசிகலாவின் நிலைமை மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications