எமகண்டத்தை வென்ற ஜெயலலிதா... சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பு
சென்னை: சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார். இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையான இன்று காலை 11 மணிக்கு சரியான எமகண்ட நேரமாகும். இந்த நேரத்தில் அளிக்கப்படும் தீர்ப்பு பாதகமாக வருமோ என்று அஞ்சினர் அதிமுகவினர். ஆனாலும் அஷ்டமி திதி என்பதால் ஓரளவு நம்பிக்கை இருந்ததாம்.

அஷ்டமி பூஜை
அஷ்டமி திதி எதிரிகளை வெல்லும் நாளாம். ராஜாக்கள் போருக்குப் போக அஷ்டமியில்தான் பூஜை செய்வார்களாம் மேலும் தீர்ப்பு வாசிக்கத் தொடங்கிய 11 மணி என்பது சுக்கிர ஓரையாம்.

நல்ல தீர்ப்பு
சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பினை அளித்துள்ளார் நீதிபதி குமாரசாமி என்கின்றனர் அதிமுகவினர்.ஏனெனில் எமகண்டமா? நல்ல நேரமா என்பதைவிட என்ன ஓரை என்பது முக்கியமாம். அந்த வகையில் சுக்கிர ஓரை சுபிட்சம் என்கின்றனர்.

14 ராசிதான்
இது மட்டுமா? தீர்ப்பு படிக்கும் கோர்ட் ஹால் நம்பர் 14. அதாவது கூட்டுத் தொகை 5. ஜெயல்லிதாவுக்கு இப்போதைய ராசி நம்பர் ஐந்தாம். ஆக, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எங்களுக்கு ஜெயம் ஜெயமே என நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களின் நம்பிக்கை வீணாகவில்லை.

எமகண்டத்தை வென்றார்
ஜெயலலிதா எமகண்டத்தை வென்று வெளியே வந்துவிட்டார். இனி எல்லா நேரமும் நல்ல நேரமே என்கின்றனர் அதிமுகவினர். எப்படியெல்லாம் கணக்கு போடுறாங்கப்பா..!


Click it and Unblock the Notifications
