தொடர் சிகிச்சையில் முதல்வர்.. ஆட்டம் காண்கிறதா தமிழக ஆட்சி நிர்வாகம்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்ட நிலையில், முதல்வர் நிர்வகிக்காத ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கவலை பொதுமக்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
[Read This: அரசை வழி நடத்தும் அப்பல்லோ மருத்துவமனையின் 'அந்த இரு' அறைகள்! உள்ளே இருப்பது யார் தெரியுமா?]
ஏனெனில், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து சிறையில் தள்ளியபோது, ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்ததை தமிழகம் பார்த்த வரலாறு உண்டு.
அமைச்சர்கள் யாருமே ஆட்சி பணியை பார்க்காமல் பெங்களூரில் குவிந்திருந்ததால் பணிகள் மொத்தமாக முடங்கின. பிறகு ஹைகோர்ட் ஜாமீனில் விடுதலை செய்த பிறகுதான் ஆட்சி நிர்வாகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், முதல்வர் அதிகமாக வெளியே வர தயங்கினார்.

சந்திப்புகள் தவிர்ப்பு
உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா வெளியே வருவதில்லை என எழுதிய பத்திரிகைகள் மீது அடுத்தடுத்து வழக்கு தொடரப்பட்டதால், முதல்வர் ஆரோக்கியத்தில் மக்களுக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது. ஆனால், ஜனாதிபதியே சென்னையில் ஒன்றரை நாட்கள் இருந்தபோதும் அவர் சந்திப்பதை தவிர்த்தது இதுவரை மக்களுக்கு புரியாத புதிர்தான்.

வேகம் குறைந்தது
பிரதமரே ராமேஸ்வரம் வந்தபோதும், ஜெயலலிதா சென்னையிலேயே இருந்தபடி அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்காததும், இதுவரை மக்கள் அறியாததுதான். பெங்களூர் சிறைவாசத்திற்கு பிறகு இப்படித்தான் படிப்படியாக ஆட்சி நிர்வாகம் வேகம் குறைந்ததாக சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

அமைச்சர்கள் குழு
இப்போது ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இரு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். அமைச்சர்கள் பலரும் ஆஸ்பத்திரியின் முதல் தளத்திலேயே குழுமி இருந்து, வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் பலர் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துகிறாரக்ள்.

முதலீட்டாளர் மாநாடு
சென்னையில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாடு நோக்கி ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான முன்னேற்பாடுகள்தான் நடந்துள்ளன.

முதலீடுகள் போச்சு
தொழிலதிபர்கள் ஒன்றும் தமிழ்நாட்டு நலனுக்காகவோ, ஜெயலலிதா அரசுடன் கொண்ட நட்பாலோ தொழில் தொடங்க முன்வரவில்லை. சலுகைகள், லாபம் போன்றவற்றை எதிர்பார்த்து வாக்குறுதி கொடுத்தவர்கள். அவர்களை அரவணைத்து மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கவும், வேலை வாய்ப்புக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவும் வேண்டியது மாநில அரசு. தொழில்துறை அமைச்சர். ஆனால் முதலீட்டாளர்களை சந்திக்க அமைச்சர்களுக்கு இப்போது நேரமில்லை. எனவே முதலீடு வரவில்லை.

அதிகாரிகள் குளறுபடி
முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றபோது பதவி வகித்த தலைமைச் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில் துறைச் செயலாளர், ஓய்வு பெற்றாலும், அவரது ஓய்வு ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாக அறிவித்தவர்களுக்கே இந்த கதியென்றால், முதலீட்டாளர்கள் எந்த தைரியத்தில் தமிழகத்திற்கு வருவார்கள்.

சட்டசபை அறிவிப்புகள்
ஜெயலலிதா, அவ்வப்போது, சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஏராளமான புதிய அறிவிப்புகளை அறிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடுக்கான அனுமதியை, சட்டசபை வழங்கியது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவற்றை ஆலோசித்து, துறை வாரியாக டெண்டர் அறிவிப்புகள் முதல் நடைமுறை செயல்பாடுகள் வரை தொடங்க வேண்டும். துறை வாரியான அமைச்சர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எதற்கு முன்னுரிமை என்ற முடிவை முதலமைச்சர் எடுத்து, அறிவிக்க வேண்டும். ஆனால் இவையும் இப்போது நடக்கவில்லை.
முதல்வர் குணமடைய, இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே ஏராளமான கோப்புகள் முதலமைச்சருக்காகவும் அமைச்சர்களுக்காகவும் காத்திருக்கின்றன. இப்போது அவை இன்னும் சேர ஆரம்பித்துவிட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications