ஆர்.கே.நகர். தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதனிடையே சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அண்ணா திமுகவின் வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தேர்தலை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையில் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
