ஆளுநர் வந்தபோது ஜெ சுயநினைவோடு இல்லை... கட்டை விரலை காட்டவில்லை- தீபக்
ஆளுநர் அப்பல்லோவிற்கு வந்த போது ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்றும் ஜெயலலிதாவின் அண்ணண் மகன் தீபக் பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்த போதுதான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார் என்று தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தி காட்டியதாக கூறியது பொய் என்றும் தீபக் பரபரப்பை பற்ற டிவத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது.

ஜெ.,சந்திக்கப் போன ஆளுநர்
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூன்று முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என கூறப்பட்டது.

மருத்துவர்கள் சந்திப்பு
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வதந்திகள் பரவுவதால் அதனை தடுக்க ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்தனர்.

மருத்துவர்கள் தகவல்
இந்த சந்திப்பின் போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், ஜெயலலிதா தனது கட்டை விரலை தூக்கி காண்பித்து தான் குணமாகி வருவதை அவருக்கு உணர்த்தியதாக மருத்துவர்கள் முதன் முறையாக கூறினார்கள்.

ஆளுநர் வருகை
இப்போது மருத்துவர்கள் கூறியது பொய் என்று பேட்டி கொடுத்து பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளார் தீபக்.
ஆளுநர் ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், அப்பொழுது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்தார் எனவும் தீபக் கூறியுள்ளார்.

கட்டை விரல் காட்டவில்லை
ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்றும் ஜெயலலிதாவின் அண்ணண் மகன் தீபக் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா கட்டை விரல் ஆளுநர்
இதுவே இப்படி என்றால் இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதா வெளியிட்டதாக கூறப்பட்ட அறிக்கையும், வேட்பாளர்களுக்காக ஜெயலலிதா வைத்த கட்டை விரல் ரேகையும் பொய்தான் என்பது போல தீபக் பேட்டி வெளியாகியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications