ஆங்கில பத்திரிகையில் அவதூறு பேட்டி: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு வழக்கு
சென்னை: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி, ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று சுப்பிரமணியசாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் "முதல்வரின் நற்பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுப்பிரமணியசுவாமி பேட்டியளித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின் உண்மை தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட்டுள்ளது, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது, உள்நோக்கம் கொண்டது. இச்செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரையும் தண்டிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications