ஆளுநர் ரோசய்யாவுக்கு பிறந்த நாள்.. முதல்வர் ஜெயலலிதா போனில் வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் 82வது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக ஆளுநரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா இன்று தனது 82வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, முதல்வர் ஜெயலலிதா, ரோசய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், பிறந்த நாள் வாழ்த்து கடிதம் மற்றும் பூங்கொத்தை, ஆளுநருக்கு ஜெ. அனுப்பி வைத்தார். அந்த வாழ்த்து கடிதத்தில், நல்ல உடல் நலம், மன நலத்துடன் நீண்ட காலம் நீங்கள் வாழ வாழ்த்துவதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications