அம்மா நலமாக உள்ளார், மகிழ்ச்சியாக இருக்கிறது: அப்பல்லோவில் இருந்து குற்றாலீஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க புதன்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்வரின் உடல்நிலை குறித்து அதிமுகவினர் அவருக்கு விளக்கியுள்ளனர்.

Jayalalithaa is doing fine: Kutraleeswaran

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த நான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். அவர் முதல்வரின் உடல்நலம் பற்றியும், அவருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றியும் விளக்கமாக தெரிவித்தார்.

முதல்வர் தற்போது நலமாக இருப்பதாக அவர் கூறினார். அவர் கூறியதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது நல்ல பலனை அளித்துள்ளது. அவர் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றார்கள்.

அது போதும் எனக்கு. விளையாட்டு வீரர்களுக்கு உதவும் ஜெயலலிதாவுக்காக நான் மட்டும் அல்ல பல கோடி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த பிரார்த்தனை எல்லாம் வீண் போகாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+