இலங்கை கைது செய்த 24 மீனவர்கள், 93 படகுகளை மீட்க வேண்டும்: பிரதருக்கு ஜெ., கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும், 93 படகுகளையும் மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் 3 மீனவர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை, இலங்கை கடற்படையினர் 15-ம் தேதி நள்ளிரவில் கைது செய்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பாக் நீரிணை பகுதியில், தங்கள் பாரம்பரிய பகுதியில் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித்து வருகின்றனர். இவர்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று உரிமையை இலங்கை அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். கடந்த 1974 மற்றும் 76-ம் ஆண்டுகளில், கச்சத்தீவை தாரைவார்ப்பது தொடர்பாக இந்தியா- இலங்கை இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்த ஒப்பந்தமே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம். இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து, நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துள்ளது. இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.
இதைவிட, இலங்கை அரசு பறிமுதல் செய்த படகுகளை நீண்டகாலமாக விடுவிக்க மறுப்பது, வேதனைக்குரியதாகும். நீண்டகாலமாக படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பதால், அவற்றை தொடர்ந்து மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடும். இது மீனவர்களுககு மிகப்பெரிய இழப்பாகும்.
எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில், நிலையான மற்றும் நடைமுறைக்கேற்ற தீர்வை மத்திய அரசு காண வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, 24 மீனவர்கள் மற்றும் 93 படகுகளை உடனடியாக விடுவிக்க, வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications