தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை கடற்படை, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. எனவே, தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

மேலும், தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இந்த படகுகளை விடுவிக்காதது மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையில் உள்ள தமிழர்களின் 26 படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications