செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: ஞானதேசிகன் அறிக்கையை அப்படியே வழிமொழிந்த ஜெயலலிதா!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இதுவரை பேசாமலேயே இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக எதிர்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.முக்கிய காலகட்டத்தில் போது முதல்வர் உத்தரவிட்டு நீர் திறப்பது திமுக ஆட்சிகாலத்தில் இருந்து நடந்து வருகிறது. வரலாறு காணாத மழையும், பல ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் அடையாற்று வெள்ளத்திற்கு காரணம் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுகுழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.
மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன. இறுதியில், ஜெயலலிதா சிறப்புறையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொண்டர்களால் உயர்ந்தேன்...
கடந்த நான்கரை ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது.அண்ணா எம்.ஜி.ஆர் போல் நானும் கழக தொண்டர்களால் உயர்ந்தேன்.
நான் செய்த சாதனைகள்...
அரசின் சாதனைகள் அத்தனையும் என்னால் மட்டுமே சாத்தியமானது. காவிரி,முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க அரசே நிலைநாட்டியது.
பொய்ப் பிரச்சாரம்...
மழை வெள்ள பாதிப்பின் போது அனைத்து துறைகளும் துரிதமாக செயல்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உண்மைக்கு புறம்பாக எதிர்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
சென்னை வெள்ளத்திற்குக் காரணம்...
முக்கிய காலகட்டத்தில் போது முதல்வர் உத்தரவிட்டு நீர் திறப்பது தி.மு.க ஆட்சிகாலத்தில் இருந்து நடந்து வருகிறது. வரலாறு காணாத மழையும், பல ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் அடையாற்று வெள்ளத்திற்கு காரணமாகும்.
சட்டசபைத் தேர்தல்...
2014 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதே போல் 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. சட்டசபை தேர்தல் தொடர்பாக சூழ்நிலைக் கேற்ப முடிவு செய்யப்படும்.
வெற்றி...வெற்றி...
இதுவரை அதிமுக 6 முறை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது. இனியும் இருக்கம். இனி அதிமுக.,விற்கு தோல்வி என்பதே இல்லை. எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
பாராட்டு...
அதோடு வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு உதவிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அவர் பாராட்டினார்.
செம்பரம்பாக்கம்...
இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மனித தவறே காரணம்...
வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் பல ஆண்டு சேமிப்புகளை இழந்தனர். மிகுந்த பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு மனித தவறே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
விளக்கம்...
ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த ஜெயலலிதா, தற்போது முதன்முறையாக அது குறித்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொன்னதையே முதல்வரும் திரும்பக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications