எம்.ஜி.ஆர் 28வது நினைவு தினம்: ஜெயலலிதா அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த காரணத்தால் அவரைக் காண பல்லாயிரக்கணக்கானோர் மெரீனா கடற்கரைசாலையில் குவிந்தனர்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அனைவரும், 2016 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர களப்பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.
அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மையாதை செலுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா,இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி மொழி எற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சோதனைகள் பல வென்று மீன்றும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாசியோடு கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க அதனை அமைச்சர்களும், அதிமுகவினரும் உணர்ச்சி பொங்க திரும்ப கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications