தமிழகத்தை குழந்தைநேயமிக்க மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர்
சென்னை: குழந்தைநேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் உறுதியேற்போம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைப் பருவ உரிமைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை நினைவுப்படுத்தும் வகையில் "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழக அரசின் நோக்கம்
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" எனும் அவ்வை பிராட்டியின் பொன்மொழிக்கிணங்க எண்ணும் எழுத்துமாகிய கல்வியே குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்வழி காட்டிடும் கண்களைப் போன்ற பெருமை மிக்கது என்பதை பெற்றோரும், மற்றோரும் உணர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழித்து குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு முறையான கல்வி அளித்து வாழ்வில் மேம்படுத்திட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.

குழந்தைகளுக்குக் கல்வி
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளுக்கு முழு வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளும் கல்விச் செல்வம் பெற்றிட, எண்ணற்ற திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள்
இதுமட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கண்டறியப்படும் சூழலில், தமிழ்நாடு அரசால் அத்தகைய குழந்தைகள் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி மையங்களில் அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் வாழ்வு
"இன்றைய நாற்றுகள், நாளைய விருட்சங்கள்" - என்பதனைக் கருத்தில் கொண்டு, அனைவரும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை வளமாக்கிட வேண்டும் என்றும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, குழந்தைநேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் இந்நாளில் உறுதியேற்போம்". இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications