காவல்துறை மானியக்கோரிக்கை முடிந்தது: நாகத்தம்மனுக்கு நன்றி சொன்ன ஜெ.,
சென்னை: சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, சபை ஒத்திவைக்கப்பட்டதும் கோட்டை வாசலில் இருந்த நாகாத்தம்மன் கோவிலை வணங்கி விட்டு பூசாரிக்கு ஒரு கவர் கொடுத்து விட்டுச் சென்றார்.
கோட்டூர்புரம் வரசித்தி விநாயகரைப் போல தலைமைச் செயலக வாசலில் உள்ள கோட்டை நாகாத்தம்மனும் முதல்வர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வ லிஸ்டில் இணைந்து விட்டார். முக்கிய நிகழ்வுகளின் போது நாகத்தம்மன் கோயில் அருகே காரை நிறுத்தி ஜெயலலிதா வணங்குவார்.

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். பகல் 12.15 மணிக்கு அவர் உரையாற்றி முடித்ததும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இருந்து வீட்டுக்கு 12.45 மணிக்குப் புறப்பட்டார். அப்போது கோட்டை நுழைவு வாயிலில் இடதுபுறம் உள்ள நாகதேவதை அம்மன் கோவில் அருகே முதல்வர் கார் நிறுத்தப்பட்டது.
கோயில் பூசாரி, சுவாமிக்கு தீபாரதனை காட்டி, முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்து வந்தார். அதை தொட்டு வணங்கிய முதல்வர் ஜெயலலிதா அந்த பூசாரிக்கு ஒரு கவர் கொடுத்து விட்டு சென்றார்.
கோட்டை முழுவதும் நேற்றிரவில் இருந்தே போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. ஒருவித பதற்ற உணர்வுடனேயே காணப்பட்டது. முதல்வரின் துறையான காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நல்லபடியாக முடிந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா நாகாத்தம்மனுக்கு நன்றி கூறிச் சென்றார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications