கோடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார். சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதல்வர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் இன்று கோடநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் ஜெயலலிதா. கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார்.












Click it and Unblock the Notifications