ஜெயலலிதாவுடன் நாளை பதவியேற்கும் 28 அமைச்சர்களும் துறைகளும்...
சென்னை: தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்களும் துறைகளும்:
ஜெயலலிதா- காவல், உள்துறை
ஓ. பன்னீர்செல்வம்-நிதி, பொதுப்பணித் துறை
நத்தம் விஸ்வநாதன்-மின்சாரத் துறை, மதுவிலக்கு
வைத்திலிங்கம்- வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்துறை
எடப்பாடி பழனிச்சாமி- பழனிச்சாமி- நெடுஞ்சாலை, வனத்துறை
மோகன்- ஊரகத் தொழில் துறை

வளர்மதி -சமூக நலம்
பழனியப்பன் -உயர் கல்வித் துறை
செல்லூர் ராஜூ- கூட்டுறவுத் துறை
காமராஜ்- உணவு, இந்து சமய அறநிலைத் துறை
தங்கமணி- தொழில்துறை
செந்தில்பாலாஜி- போக்குவரத்துத் துறை
எம்.சி. சம்பத்- வணிகவரி

எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம்
டி.கே.எம்.சின்னையா- கால்நடைத்துறை
கோகுல இந்திரா- கைத்தறித் துறை
சுந்தரராஜ்- இளைஞர் நலம்
சண்முகநாதன்- சுற்றுலாத்துறை
என். சுப்பிரமணியன்- ஆதி திராவிடர் நலத்துறை
கே.ஏ. ஜெயபால்- மீன் வளம்
முக்கூர் சுப்பிரமணியன்- தகவல் தொழில்நுட்பம்
உதயகுமார்- வருவாய்த் துறை

ராஜேந்திரபாலாஜி- செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை
ரமணா- பால்வளம்
வீரமணி- பள்ளிக் கல்வித்துறை
தோப்பு வெங்காடசலம்- சுற்றுச் சூழல்துறை
பூனாட்சி - காதி, கிராம தொழில்கள் வாரியம்
அப்துல் ரஹீம் - பிற்பட்டோர், சிறுபான்மை நலன்
விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத் துறை
இருவருக்கு இடம் இல்லை
ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செந்தூர் பாண்டியன், ஆனந்தன் (வனத்துறை) ஆகியோருக்கு தற்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் இல்லை.
இவர்களில் செந்தூர்பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக மட்டுமே இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான அமைச்சர்களின் இலாகாகளும் மாற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications