ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.. 2 வாரத்தில் மீண்டும் விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். அதில், டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பான அறிக்கை தமிழக அரசும் அப்பல்லோ மருத்துவமனையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் தமிழக அரசுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இன்று மரண அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மரண அறிக்கையை கோரியிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அதனை அளிக்காமல் மனுவை மட்டுமே தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், மறைந்த ஜெயலலிதா தனது புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எம்சிஏ விதிகளின்படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும் அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications