ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு- ஹைகோர்ட் நோட்டீஸ்!!
சென்னை: ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி. சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூன் மாதம் டைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனுவை தேர்தல் ஆணையம் முறைகேடாக நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஆர்.கே.நகர் தேர்தலை சட்டவிரோதம் என அறிவித்து, அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வேட்பாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
டிராபிக் ராமசாமி வழக்கு
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுளளதாகவும் எனவே, அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகாததால் வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications