முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் - டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை : முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், பூரண நலமடைந்து ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து நலம் விசாரிக்க ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் யாரும் முதல்வரை சந்திக்க முடியவில்லை.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல் ராஜீவ் காந்தி வரை பலரும் அப்பல்லோவிற்கு வந்து மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், பூரண நலமடைந்து ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார் என தெரிவித்தார். முதல்வரின் உடல் நிலை குறித்து அமைச்சர்கள் பன்னீர் செல்வம், விஜயபாஸ்கரிடம் கேட்டு அறிந்ததாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications