ஜெ. போன்ற தோற்றம், குரல்.. பேச்சு ஸ்டைல்... தீபாவை பார்த்து ஆச்சரியத்தில் அதிமுக தொண்டர்கள்!
ஜெயலலிதா போலவே தோற்றம்,பேச்சு என வெளிப்படும் அவரது அண்ணன் மகள் தீபாதான் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.அவர்தான் தலைவராக வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் போராட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் அச்சு அசல் போலவே தோற்றத்திலும் பேச்சிலும் அவரது அண்ணன் மகள் தீபா தோற்றமளிப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்துள்ளது.
ஜெ. தீபா.. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிகம் அடிபடுகிற பெயர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள். ஜெயலலிதாவின் ரத்த உறவு.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவரை அனுமதிக்க மறுத்தார்கள். ஜெயலலிதா மறைந்தபோதும் பெரும் போராட்டத்துக்கு பின்னர்தான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தீபாவால் முடிந்தது.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிலும் கூட தீபா அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவின் தலைவராக ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக தீபாதான் வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தி டிவியில் தீபாவின் முழுமையான பேட்டி இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்பேட்டியின் தொடக்கம் முதலே தமது குடும்பத்துக்கும் அத்தைக்குமான உறவை ஜெயலலிதாவை சுற்றியிருந்தவர்கள்தான் தடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதேநேரத்தில் தீபாவின் தோற்றம், பேச்சு, உடல்மொழி அத்தனையுமே அச்சு அசலாக ஜெயலலிதாவைப் போல இருப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்திருக்கிறது.
இனி ஜெயலலிதாவின் ஒரே வாரிசு; அதிமுகவின் ஒரே தலைவி ஜெ. தீபா என்ற குரல் வலுக்கவே செய்யும்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications