‘புதன் ஓரை’... இதுக்கும் ஜெ. பதவியேற்புக்கும் என்ன சம்பந்தம்?
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு கூறிய நாள், லட்சுமி நரசிம்மர் அவதரித்த தினம் என்பதால், அதற்கு பரிகாரமாக ஜெயலலிதா பதவியேற்பு சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் புதன் ஓரையிலேயே நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவிகளை இழந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக இருந்த தடை நீங்கியது. எனவே, விரைவில் அவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் புதன் ஓரையிலேயே நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு கூறிய நாள் லட்சுமி நரசிம்மர் அவதரித்த தினம் என்பதாகும்.
எனவே, இதற்குப் பரிகாரமாகவே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் புதன் ஓரையில் நடத்தப் படுகிறது.
அதாவது, எம்.எல்.ஏ.,க்கள் கூட்ட அறிவிப்பு கடந்த 15ம் தேதி, புதன் ஓரை வரும் நேரமான காலை 8:30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் 17ம் தேதி காலை 8:30 மணிக்கு புதன் ஓரையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அன்று மாலை 4:00 மணிக்கு புதன் ஓரையில் ஆர்.கே.நகர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படும் ஜெயலலிதா, அடுத்த 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே, ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாகவே, அதிமுக கோட்டையான ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் புதன் ஓரையில் ஜெயலலிதா 22ம் தேதி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியானது. அதேபோல், வரும் 22ம் தேதி காலை 7:00 மணிக்கு புதன் ஓரையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பின்னர், அன்று பகல் 2:00 மணிக்கு புதன் ஓரையில், தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்க உள்ளார். மறுநாள், 23ம் தேதி காலை 11:00 மணிக்கு புதன் ஓரையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
மேலும், தற்போது ஜெயலலிதாவின் ராசி எண், 5 என்பதால், 23ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுவதாகவும், அன்று அவருடன் 32 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications