ஆந்திரா சிறையில் உள்ள 516 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெ. கடிதம்
சென்னை: ஆந்திரா சிறையில் வாடும் 516 தமிழக தொழிலாளர்களை ஜாமீனில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை ஆந்திரா அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர்களில் பலர் ஆண்டுக்கணக்கில் விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆந்திராவில் வனம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் 516 தமிழக தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை ஜாமீனில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலருக்கு ஜாமீன் பெற தகுதி இருந்தும் உரிய சட்ட உதவி கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பலரும் ஜாமீன் பெற முடியும். இவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க உதவ வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications