ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஜூன் 6ல் நன்றி தெரிவிக்கிறார் ஜெயலலிதா
சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து வரும் 6ம் தேதியன்று தனது வெற்றிக்கு காரணமான வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வருகிற 6 ஆம் தேதி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்.
புரட்சித் தலைவர் ஆழுசு சிலை - பெட்ரோல் பங்க், காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பு, சூரியநாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை.
கிராஸ் ரோடு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, காமராஜர் காலனி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் தெரு-வ.உ.சி. சாலை சந்திப்பு, இளைய முதலி தெரு.
வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம்-எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ.நகர் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், பழைய வைத்தியநாதன் சாலை, புதிய வைத்தியநாதன் சாலை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, மகாராணி தியேட்டர் ஆகிய இடங்களில் முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications