என்னது ஒதுக்கப்பட்ட தொகுதியில் தோற்றால் ஜெயிலுக்குப் போகனுமா? பீதியில் தமிழக அமைச்சர்கள்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாமல் போனால் பதவி பறிப்புகளைத் தாண்டி ஏதாவது ஒரு வழக்கில் சிறைக்கு செல்லவும் நேரிடும் என்ற பீதியில் அதிர்ந்து போயுள்ளார்களாம் தமிழக அமைச்சர்கள்.
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது அதிமுக. கடந்த மாதம் 3-ந் தேதி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கிறார்.

30-ல் வெற்றி நிச்சயம்
40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று அவர் பிரகடனம் செய்தாலும் குறைந்தது 30 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்ற கணக்குடன்தான் வலம் வருகிறார் ஜெயலலிதா. அதாவது மத்திய சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தர்மபுரி, நாகை, சேலம், கோவை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் வென்றுவிடும் என்பது ஜெ. கணிப்பாம்.

எதிர்க் கட்சிகளுக்கு 10
இதனால் எஞ்சிய 30 தொகுதிகள் மட்டுமின்றி இந்த 10-ல் குறைந்தது 5 ஐ கைப்பற்றியே ஆக வேண்டும் என்று 'கட்டளை' பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆனாலும் ஜெயலலிதா வெல்வோம் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கும் 30 தொகுதிகளிலும் கூட உள்ளடி வேலைகள் நடப்பதாக உளவுத் துறை தகவல் கொடுத்திருக்கிறது.

நடவடிக்கை ரெடி!
இதனால் கோபமடைந்துள்ள ஜெயலலிதா, அமைச்சர்களுக்கு கொடுத்த புது கட்டளை உங்கள் தொகுதியில் வேட்பாளர் தோற்றால்.. "நடவடிக்கை"யை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. ஆனால் அது கட்சி பதவி, அமைச்சர் பதவி பறிப்பு மட்டும் இல்லை..

சிறைவாசம்
பணம் பறிமுதல், வழக்குகள், சிறைவாசம்.. அன்று சுதாகரனுக்கு நடந்தது எல்லாமே உங்களுக்கும் நடக்கும் என்று அதிரடியாக சொல்ல உறைந்து போய்கிடக்கிறார்களாம் அதிமுக அமைச்சர்கள். இதையும் மீறி தஞ்சாவூர், திருச்சியில் ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்துக்கு கூட்டம் இல்லை என்று அதிமுக ஆதரவு ஊடகங்களே செய்தி வெளியிட மிக மிக கோபமடைந்தாராம்.

திகிலில் அமைச்சர்கள்
இதனால் அந்த தொகுதிகளுக்கான பொறுப்பான அமைச்சர்களை அழைத்து டோஸ் விட்ட கையோடு நடவடிக்கை பாயும் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்ல திகிலடித்தவர்களாக தொகுதிப் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications