ஜெ., போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் மன நிலை எப்படி உள்ளது ? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை தொகுதி வாரியாக வெளியிட்டு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்எல்ஏ பதவியை இழந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இடைத்தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்று முதல்வர் பதவி ஏற்றார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலிலும், மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அந்த தொகுதியில் தந்தி டிவி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வெற்றிக் கனியை பறித்துக் கொடுப்பார்கள் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுதியில் அதிமுகவுக்கு 47 - 53 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் சிம்லா முத்துச்சோழனுக்கு 37 - 43 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி கருத்துக்கணிப்பு விவரம்:
அதிமுக 47 - 53%
திமுக 37 - 43%
விசிக 3 - 9%
பிற கட்சிகள் 3%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : #RKNagar தொகுதியில் #Jayalalithaa-க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? pic.twitter.com/goprY8Abrf
— thanthitv (@thanthitv) May 13, 2016
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications