சசிகலாவை பகடைக்காயாக்குகிறார் டிஐஜி ரூபா.. 'பொங்கும்' திவாகரன் மகன் ஜெயானந்த்
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க எங்கள் பொதுச் செயலாளரை பகடைக்காயாக்குகிறார் கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா என்று திவாகரன் மகன் ஜெயானந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க சசிகலா மீது பழி போடுகிறார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் கொந்தளித்திருக்கிறார்.
பெங்களூர் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும், அவருக்கென்று தனி சமையலறை உள்ளது என்றும் சிறையில் சொகுசான வாழ்க்கையை பெற சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிறை துறை டிஐஜி ரூபா மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் வழங்குவதா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயானந்த் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், டிஐஜி ரூபாவுக்கு அந்த மாநில சிறை துறை டிஜிபி இரு முறை மெமோ கொடுத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை திசைத்திருப்ப எங்கள் பொது ச் செயலாளர் சசிகலாவை பகடைக்காயாக்குகிறார். தண்ணீர், உணவு, படுக்கை வசதி அளிக்கப்படுகிறது.
இதையெல்லாம் சிறப்பு வசதி என்று குற்றம்சாட்டினால் என்ன சொல்வது. இந்த குற்றச்சாட்டை முதல்முறையாக ரூபா வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டை இது வரை அவர் எழுத்துப்பூர்வமாக டிஜிபிக்கு அளிக்கவில்லை.
செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் மட்டும் அளித்தார். சிறைத் துறை டிஜிபி மீதான குற்றச்சாட்டு ஏன் இத்தனை பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலா மீது முன்னிறுத்தி வைக்கப்பட்டதால்தான் என்றார் ஜெயானந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications