இது சும்மா ட்ரைலர்தான்.... எடப்பாடியை எச்சரிக்கும் திவாகரன் மகன் ஜெயானந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கெத்து காட்டும் ஜெயானந்த்-வீடியோ

  சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் திவாகரன் மகன் ஜெயானந்த், திருச்சி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

  சசிகலா புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெயானந்த், இவர் இருந்திருந்தால் இன்னமும் கூட்டம் கூடியிருக்கும் என்று கூறியுள்ளார்.

  ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை போட்டு வடிவேலு பாடும் ஒப்பாரி பாட்டினை பதிவிட்டுள்ளார். அரசுக்கு எதிராகவும் பல்வேறு பதிவுகளை போட்டுள்ளார் ஜெயானந்த்.

  தாங்குமா எடப்பாடி அரசு

  இவர் இல்லாமலே இவ்வளவு. .... வந்தால் தாங்குமா எடப்பாடி அரசு...? என்று சசிகலாவின் போட்டோவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளார் ஜெயானந்த்.

  இது டிரைலர் மட்டுமே....

  திருச்சியில் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் திரண்ட பொதுமக்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெயானந்த், டெல்டாவின் சக்தியை பாருங்கள் இது டிரைலர் மட்டுமே என்று கூறியுள்ளார்.

  எதுக்கு இந்த ஒப்பாரி

  ஓபிஎஸ் படத்த போட்டு ஒப்பாரி பாட்டையும் பதிவேற்றியுள்ளார் ஜெயானந்த். என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.

  இளைஞர்களின் கனவு

  எதிர்கால இளைஞர்களின் கனவு சட்டசபையில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும். உங்கள் தலைமை ஏற்று உங்கள் பாதையில் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார் ஜெயானந்த்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala's brother Divakaran's son Jeyanandh Dhivakaran warning Edapadi Palanisamy government. He post his face book page Trichy anti NEET rally images.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற