4 நாட்களாக நடந்த நகைக்கடை உரிமையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ்
சென்னை: தங்க நகைகள் மீதான கலால் வரி உயர்வு குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் பான் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த 2ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தால் 3 நாட்களில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்க பிரிதிநிதிகள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து கலால் வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். வரி உயர்வு குறித்து பரிசீலிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சென்னை தங்க, வரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இன்று அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்படும் என்றும், மும்பையில் நடக்கும் நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஜெயந்திலால் மேலும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications