அந்த இரட்டை குழல் துப்பாக்கியில குண்டு இருக்கிறதா? ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு லந்து கொடுக்கும் திவாகரன் மகன்
ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை விமர்சித்து ஜெயானந்த் பதிவிட்டுள்ளது வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றியால் உற்சாகத்தில் ரொம்பவே மிதந்து கொண்டிருக்கிறது மன்னார்குடி குடும்பம்.. திவாகரன் மகன் ஜெயானந்த், முதல்வர் ஓபிஎஸ், துணை முதல்வர் ஈபிஎஸ்ஸை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுவிட்டார் தினகரன். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தில் இளவரசி குடும்பத்தினர் தினகரனுக்கு எதிராக இருந்தனர். கிருஷ்ணப்பிரியாவும் விவேக்கும் தினகரன் மீது காட்டத்தை காட்டினர்.

ஆனால் திவாகரன் மகன் ஜெயானந்தோ, தினகரன் தரப்புக்கு ஆதரவாக கருத்துகளை கூறிவந்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் வென்ற நிலையில் இளவரசி குடும்பமும் அவர் பக்கம் சாய தொடங்கிவிட்டது. இந்த வெற்றியின் உச்சத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், ஓபிஎஸ், ஈபிஎஸ் படத்தைப் போட்டு கீழே, "இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்- எடப்பாடி பழனிச்சாமி' என குறிப்பிட்டிருக்கிறார். அதன் கீழே தினகரன், தமது படத்தை போட்டு, இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்- அதில் குண்டு இருக்கின்றதா? இல்லையா? - ஜெய் ஆனந்த் திவாகரன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயானந்தின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications