விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமரின் நோய் முதல்வருக்கும் பரவி விட்டது.. ஜோதிமணி அதிரடி அட்டாக்!
விவசாயிகளை சந்திக்க பிரதமர் மறுத்ததை போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மறுத்துவிட்டதால் அவரது வியாதி இவருக்கு பரவிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்
சென்னை: விவசாயிகளை சந்திக்க மறுக்கும் வியாதியானது பிரதமரிடம் இருந்து முதல்வருக்கும் பரவி விட்டதாக ஜோதிமணி தெரிவித்தார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம், விளைபொருளுக்கு நல்ல விலை, வறட்சி நிவாரணம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாண போராட்டத்தை நடத்தியும் அவர்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வில்லை. மேலும் பிரதமரும் விவசாயிகளை சந்திக்கவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தவிர வேறு யாரும் அவர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதன் பேரிலும், நிதி ஆயுக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்ததன் பேரிலும் விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன் தலைமை செயலகத்துக்கு சென்ற அய்யாக்கண்ணுவை நிதி செயலர் சண்முகம் சந்திக்க மறுத்துவிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
விவசாயிகளை சந்திக்காத வியாதி பிரதமரிம் இருந்து முதல்வருக்கும் பரவி விட்டதா? https://t.co/y9JG5551gB
— Jothimani (@jothims) May 23, 2017
இதைத் தொடர்ந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி தலைமை செயலகத்துக்கு அய்யாக்கண்ணு சென்றார். ஆனால் அவர்களை முதல்வர் சந்திக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதி மணி டுவிட்டர் பக்கத்தில் பதிவில் குறிப்பிடுகையில், விவசாயிகளை சந்திக்க மறுக்கும் வியாதி பிரதமரிடம் இருந்து முதல்வருக்கும் பரவி விட்டதாக பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications