இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி: தமிழீழ செய்தியாளர் இசைப்பிரியா படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இலங்கை தமிழ் ஊடக செய்திவாசிப்பாளர் இசைபிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்த வீடியோ அண்மையில் வெளியானது. இந்த கொடூர செயலைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த தடை விதிப்பதுடன், காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பது பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள். இதை வலியுறுத்தி தூத்துக்குடி பாளை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். பிரஸ் மீடியா அசோசியேஷன் துணைத் தலைவர் ராஜாசாலமோன், இணைச் செயலாளர் உலகாள்வோன், வழக்கறிஞர் மாடசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள் குமாரவேல், நாசரேத் முருகன் உள்ளிட்ட செய்தியாளர்கள், புகைப்பட வீடியோ கலைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications