நெல்லை: கலெக்டர் அலுவலகத்தில் ஷாக் அடித்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்
நெல்லை: நெல்லையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய தனியார் நிறுவன ஊழியரின் உயிரை அங்கிருந்த செய்தியாளர்கள் காப்பாற்றினர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராட்சத விளம்பர பலகை ஒன்று அமைந்துள்ளது. இந்த விளம்பர பலகையின் மீது ஏறிய தனியார் நிறுவன ஊழியர் விளம்பர போர்டின் அளவுகளை தகரத்திலானா டேப் மூலம் அளந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் வயரில் டேப் சிக்கியதால் அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் விளம்பர போர்டை பிடித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை தற்செயலாக பார்த்த புகைப்படக்காரர் கண்ணன், அங்கு நின்று கொண்டிருந்த பிற செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தனியார் நிறுவன ஊழியரை பாதுகாப்பாக மீட்டனர்.
விபத்தில் சிக்கியவர் மேல இலந்தகுளத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பது தெரியவந்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செய்தியாளர்களின் இந்த மனிதாபிமான செயலை அவ்வழியாக சென்ற பொது மக்களும், வருவாய் துறை ஊழியர்களும் பாராட்டினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications