திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது... கி. வீரமணி
திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
சென்னை : திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். எத்தனை இடையூறுகள் வந்தாலும் இரும்புக் கோட்டை உறுதியாக நிற்கும் ஈக்கள் தான் செத்துப் போகும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்த்து விட முடியாது என்பது தான் மிக முக்கியம்.

எனவே ஈக்கள் எத்தனை பேர் சேர்ந்தாலும் இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும். ஈக்கள் தான் செத்துப்போகும் இது தான் இன்றைய அரசியல் நிலவரம்.
இந்த புதிய அரசியல் சூழ்நிலையில் அண்ணாவின் நினைவுநாளில் உறுதியேற்போம். அண்ணா அடித்தளமிட்ட திராவிட அரசியல் ஆயிரம் காலத்து பயிராக என்றைக்கும் பாதுகாப்பப்படும்.
அது தான் பண்பாட்டின் சிகரம், அது தான் பண்பாட்டின் உச்சம். அண்ணாவின் வழியை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிற கால கட்டம் இது என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications