நான் எந்த தப்பும் செய்யவில்லை.. காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. கன்னடத்தில் கோரிய ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: நான் எந்த தப்பும் செய்யவில்லை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினர் உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை.
அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கனும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.

வர்த்தகசபையே செய்யலாமா
காலா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்போருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே ஆதரவாக இருப்பது புரியவில்லை. அவர்களே எதிர்ப்பது சரியாக தெரியவில்லை. திரைப்பட வர்த்தகசபை என்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் கஷ்டப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் ஒரு அமைப்பு.

கர்நாடகாவிற்குதான் கெட்ட பெயர்
கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று நாங்கள் முயல்வது வீம்புக்காக இல்லை. உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அது ஏன் என்ற கேள்வி எழும். அது கர்நாடகாவிற்கே நல்லா இருக்காது.

குமாரசாமி பாதுகாப்பு
காலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஹைகோர்ட் படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய அரசு உதவ வேண்டும். முதல்வர் குமாரசாமி எந்த நிலையில் இருப்பார் என தெரிகிறது. இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறிவிட்டு கன்னடத்தில் பேட்டியை தொடர்ந்தார்.

கன்னட கோரிக்கை
கன்னடத்தில் ரஜினிகாந்த் கூறியதாவது: கன்னட சகோதரர்களே நான் எந்த தப்பும் செய்யவில்லை. படம் பார்க்க வரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீங்க. படம் ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications