காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு
சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை உழைப்பவர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் காவல் அதிகாரிகள் தலைமையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் அவசர மருத்துவ உதவிக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக்குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 6 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்தில் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு, வாக்கி டாக்கி, பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்காமல் கண்காணிக்கப்படுவர். மேலும், குதிரைப்படை மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய வாகனம் மூலம் காவல் ஆளினர்களால் ரோந்து வரப்பட்டு, திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படும்.
மேலும், சிறிய அளவிலான 10 நான்கு சக்கர வாகனங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
இது மட்டுமின்றி ரோந்து வாகனங்கள் மற்றும் காவல் ஆளினர்களால் ரோந்து சுற்றிக்கொண்டு கண்காணிக்கப்படும். மோட்டார் படகுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த நபர்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள். பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில், 1 தற்காலிக காவல் உதவி மையம், அமைக்கப்பட்டு காவல் குழுவினர்களால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், மீட்புப்பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 25 பேர் மற்றும் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
நான்கு தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளினர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும்.
மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக, உழைப்பாளர் சிலை அருகில், காந்தி சிலை அருகில் மற்றும் எலியட்ஸ் கடற்கரை அருகில் உள்ள காவல் உதவி மையத்தில், சென்னை பெருநகரக் காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கையில் மாட்டி அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக காணும் பொங்கலை கொண்டாட சென்னை பெருநகரக் காவல் துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்கள் ஆகிய இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி எந்த அசம்பாவிதங்களும் நிகழாமல் காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும். அதே வேளையில், கடலில் குளிக்க முயன்று ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பதற்காக 30 கமாண்டோ வீரர்கள், மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் படகுகள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications