கலாஷேத்ரா வழக்கு.."போலீஸ் தரப்பு வைத்த முக்கிய பாயிண்ட்" ஹரி பத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை: கலாஷேத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் உள்ளது. 1936-ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம், இசை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கல்லூரி வளாகத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த புகாரில்தான் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியது மட்டுமின்றி ஜாதி ரீதியாகவும் கடுமையாக தாக்கி வந்துள்ளார் ஹரி பத்மன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அவரை ஜாமீனில் விட போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை ஜாமீனில் விட்டால், சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை, என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்று ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications