நிற்காத மரணம்.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு.. 100 பேருக்கு தொடர் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வரை 52 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 55 ஆக அதிகரித்தது. மேலும் 100க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றெச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 150க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்து வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலருக்கு கண்பார்வை பறிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சையில் இருப்பவர்களை காப்பாற்ற தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை வழங்கும் நடைமுறையை விரைவுப்படுத்தி வருகிறார். அதோடு கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications