தண்டவாளத்தில் அடுத்தடுத்து தலையை வைத்த 2 பேர்.. கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பகீர்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த 2 சம்பவம் பெரும் அதிர்வலையை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை கள்ளக்குறிச்சி ரயில்வே போலீசாரும் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக்.. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டதாக தெரிகிறது.

திருச்சி மார்க்கம்: அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற ரயில், முகமது ரபீக் உடல் மீது ஏறி இறங்கியது.. இதில், தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தில் தலையும், உடலும் தனித்தனியாக கிடப்பதாக, நேற்று காலை விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் சென்றதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போதுதான், முகமது ரபீக் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில், இன்னொரு சடலம் கிடப்பதை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆனால், இவர் யார்? எந்த ஊரை சோ்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அதே தண்டவாளம்: ஆனால் இவரும், அதே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற இன்னொரு ரயில், அவர் மீது மோதி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இவரது தலையும் தண்டவாளத்தில் தலைதுண்டாகி கிடந்ததாம்.
2 நபர்களும், ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து தலையை வைத்து படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கோணத்தில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
என்ன காரணம்: இதில் உயிரிழந்த மற்றொரு நபர் குறித்த அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இவரும் கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்த 60 வயது செல்வம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல, உயிரிழந்த கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்த முகமது ரபிக் -க்கு 50 வயதாகிறது.. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டிங் வேலை செய்து வந்தவராம்.. மனைவி, 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள்..
ஆனால், 2 நபர்களும் தற்கொலைதான் செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஒரே தண்டவாளத்தில் படுத்து 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications