Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷ சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு.. அனைத்து உண்மைகளும் வெளி வரும்! ஆர் எஸ் பாரதி பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு உள்ளது என்றும், சிபிசிஐடி மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.

dmk RS Bharathi aiadmk BJP kallakurichi liquor death tamil nadu


இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் இது போன்று ஒரு சம்பவம் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு உள்ளது என்று திமுகவின் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் திட்டமிட்டு இதை அரசியல் ஆக்குவதற்காக எடப்பாடியும் பாஜகவை சேர்ந்தவர்களும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை இருந்து இருக்குமேயேனால் இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்து இருக்க வேண்டும்.

காரணம், இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே முதல்வர் முக ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதைபொருள் விவகாரம் தொடர்பாக ஆலோசித்து கள்ளச்சாரயம் விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காவல்தூறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதை அனைவரும் அறிவார்கள். அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையும் மீறி இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது என்றால் நீதி விசாரணை அமைக்கப்பட்டு இருக்கிறது.

நிச்சயமாக உண்மைகள் வெளி வரும். ஒவ்வொரு நாளும் வரும் தகவலை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதிமுகவினரும் இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆக மூழ்மையாக இதை கண்டறிவதற்கு முன்பாகவே எடப்பாடி கள்ளக்குறிச்சியில் போய் நின்று கொண்டு அவரது ஆட்சியிலே கள்ளச்சாராயமே இல்லாதது போல நடந்து கொள்கிறார்.

நிர்மலா சீதாராமனுக்கு வரலாறு தெரியவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்தது. பலர் இறந்தனர். சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். சிபிஐ என்ன செய்தது. உங்களுக்கு எல்லாம் தெரியாதா?.. பொதுத்தேர்தல் நேரத்தில் கொடநாட்டில் இருந்து வரும் வழியில் திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அது யாருடைய பணம் என்று திமுக தரப்பில் கேட்டோம்.

யாரும் பதில் சொல்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகினோம். 2017- ல் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இன்னைக்கு 2024.. 8 வருஷம் ஆகியும் சிபிஐ எப். ஐ ஆர் கூட போடவில்லை. குட்கா கேசில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? சிபிசிஐடியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டதால் உடனடியாக எல்லா வேலையும் நடைபெற்று வருகிறது. சிபிஐ விசாரணை ஏன் கோருகிறார்கள் திசை திருப்பி எதாவது பிரச்சினை செய்யலாம் என்று பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியரே பொய்யான தகவலை கூறும்போது ஒரு நபர் ஆணையத்தில் மட்டும் எப்படி உண்மை வெளிவரும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர். திமுகவுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும் ஆளும் திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு எதற்கு சிபிஐ விசாரணை என்றும், எல்லாமே வெளிப்படையாக சொல்லிவிட்டதாலும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஆர் எஸ் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+