ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி.. ஸ்பீக்கரில் வெளியில் தெரிந்த கை.. கொழுந்தன் செய்த பயங்கரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, அண்ணி ஆசைக்கு இணங்க மறுத்தததால், அவரது 2 வயது குழந்தையை சுவரில் அடித்து கொன்ற கொழுந்தனை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடலை ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருமூர்த்திக்கு 24 வயது ஆகிறது. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிக்கு திருமூர்த்தி(2) என்ற மகனும் புவனேஸ்வரி என்ற ஒரு மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

குருமூர்த்தி பெங்களூரில் தங்கி இருந்து சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ்(22) என்பவரும் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனால் அடிக்கடி ஊருக்கு வந்த போவதையும் ராஜேஷ் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதனிடையே ராஜேசுக்கு அவரது அண்ணி ஜெகதீஸ்வரி மீது ஒரு கண் இருந்துள்ளது. தனது அண்ணியிடம் அடிக்கடி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சொன்னால் பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார் ஜெகதீஸ்வரி. ஒரு கட்டத்தில் கடுமையாக திட்டியதோடு ராஜேசுடன் பேசுவதையும் ஜெகதீஸ்வரி நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், ஜெகதீஸ்வரியை பழிவாங்குவதற்காக அவரது குழந்தை திருமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த 17-ந் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் அவனது வாயைப்பொத்தி கழுத்தை நெரித்துவிட்டு, தலையை சுவரில் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் ராஜேஷ் வெளியில் போய்விட்டார்.
இதனிடையே மாயமான குழந்தை திருமூர்த்தியை ஜெகதீஸ்வரி தேடிப்பார்த்த போது, குழந்தை கிடைக்கவில்லை. அவன் எங்கு இருக்கிறான் என்றே தெரியவில்லை. இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போதும் எதுவும் தெரியவிலலை.
இந்த நிலையில் குழந்தை மாயமானது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று ஜெகதீஸ்வரியிடம் வீட்டில் வந்து துக்கம் விசாரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் கை, அந்த ஸ்பீக்கர் பெட்டியில் தெரியாமல் பட்டது. அந்த பெட்டி கீழே விழுந்தது. ஸ்பீக்கர் பெட்டியின் பக்கவாட்டு இடைவெளியில் குழந்தையின் கை வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைடுத்து அக்கம்பக்கத்தினர் உவியுடன் ஸ்பீக்கர் பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே குழந்தை திருமூர்த்தி கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தான். இதை பார்த்து ஜெகதீஸ்வரி கதறி அழுதார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் குழந்தை இறந்த வீட்டிற்கு வந்தனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போது தான் ராஜேஷ் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசைக்கு இணங்க மறுத்ததோடு அண்ணி திட்டியதால் பழிவாங்கும் நோக்கத்தில் அவரது 2 வயது குழந்தையை கொலை செய்ததாக போலீசாரிடம் ராஜேஷ் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதனிடையே இந்த கொடூர சம்பவம் செய்த ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications