"லகலகலக" சந்திரமுகியையே மயக்கம் போட வைத்த "கலகல" கல்பனாக்கா!
சென்னை: கபாலி வசனம் மூலம் நம்மை கதி கலங்க வைத்த கல்பனா பாலேஸ் அக்கா, தற்போது சந்திரமுகி பாடல் மூலம் தீப்பொறி பறக்க மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார்.
கல்பனா பாலேஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ்ப் பெண். பாட்டுப் பாடுவதில் இவரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அட்டகாசமான பாடல்களை கூட அட்டுத்தனமாக பாடி அலங்க மலங்க விழிக்க வைத்து சிரிப்புக் காட்டுவதில் கல்பனாதான் இப்போதைக்கு இந்த பூமிப் பந்திலேயே ரொம்பப் பிரபலம்.
"தனி ஒருவளாக" இவர் மொத்தப் பாடல்களையும் மொத்தி எடுப்பதில் கில்லாடி. கபாலி பட நெருப்புடா பாடலை ஊரே கெத்தாகப் பேசி மாஸ் காட்டி வந்த சூழலில், தனது ஸ்டைலில் பாடி ரஜினி ரசிகர்களைத் தெறிக்க விட்டார் கல்பனா அக்கா.
இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல... அவ்வப்போது இப்படிப் பாட்டுப் பாடி அதிர்ச்சி வைத்தியம் தருவது தான் கல்பனா அக்கா ஸ்டைல்.
அந்தவகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், பழைய சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற 'ரா ரா..' பாடலை தனது ஸ்டைலில் பாடியுள்ளார்.
இதில் நமது வயிறைப் பதம் பார்க்கும் விசயம் என்னவென்றால், கல்பனா அக்காவின் கானத்தில், ஜோதிகா வேடமிட்ட பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்தது தான்.
நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்.. சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணானால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல பாஸூ...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications